chennai-rain | மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு ரூ.6000 நிவாரணம் அறிவித்து வழங்கி வருகிறது.
இந்த நிலையில், அதற்கான எஸ்.எம்.எஸ் உரியவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. தற்போது தென் மாவட்டங்களில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் அல்லாமல் ரேசன் கடைகள் மூலம் நேரடியாக நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஒருவேளை ஒருவருடைய ரேசன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால், அது தொடர்பாக புகார் அளிக்க ஒரு தொலைபேசி எண்ணும் அந்த குறுஞ்செய்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் ரேஷன் அட்டை இல்லாமல், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதாவது, நிவாரண நிதி பெறுவதற்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கப்படுகிறது.
இந்த விண்ணப்பங்கள் செயலி மூலம் பதிவு செய்யப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.
தமிழகத்தில் கடந்த டிசம்பரில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதற்கிடையில், இதற்கிடையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“