மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் பள்ளி மாணவர்களின் மன உறுதி காப்பதற்காக, ‘மனநல நல்லதாரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு’ என்கின்ற மனநல சேவையை தமிழக முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட மருத்துவமனை மனநல மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டு தொலைக்காட்சியின் வாயிலாக இத்திட்டத்தை துவக்கி வைத்தனர்.

‘நட்புடன் உங்களோடு’ என்கின்ற மனநல சேவைக்காக 14416 என்கின்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கு மனநலம் சம்மந்தமான ஆலோசனைகள் வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil