/tamil-ie/media/media_files/uploads/2021/12/TN-Ration-Shop.jpg)
Tamilnadu Govt Pongal Gift Update : தமிழகத்தில் வரும் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதில் புதிதாக நெய் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 3-ந் தேதி முதல் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள மக்களுக்கும் பொங்கள் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதன்படி பொங்கள் பரிசுப்பொருட்களில், பச்சரிசி வெல்லம், முந்திரி திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, போன்ற பொருட்களும், பொங்கல் பண்டிகையில் வீ்ட்டில் சமைப்பதற்கு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு புளி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை கோதுமை மாவு உப்பு உட்பட 21 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கள் பரிசு அறிவிக்கப்பட்டது. தற்போது புதிதாக நெய் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் கருப்பு மற்றும் ரொக்கப்பணம் அறிவிக்கப்படவில்லை என்று சர்ச்சை எழுந்த நிலையில், அனைத்து பொங்கல் பரிசிலும் கரும்பு கண்டிப்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதால், பொங்கள் பண்டிகைக்கு ரொக்கப்பணம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.
இநநிலையில் பொங்கல் பரிசு வரும் ஜனவரி 3-ந் தேதி முதல் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப்பொருட்கள் மக்களுக்கு தரமானதாகவும் நியாயமான முறையில் வழங்கிடவும் திட்டத்தை ஒருங்கிணைத்து திறம்பட செயல்படுதத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.