ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆக்சிஜன்: மத்திய அரசிடம் முறையிட தமிழகம் முடிவு

45 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை மத்திய அரசு தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு அனுப்ப உத்தரவு

சென்னை அருகே அமைந்திருக்கும் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து உருவாக்கப்படும் 45 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயுவை மத்திய அரசு தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு அனுப்ப பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசிடம் பேச இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும் படிக்க : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை? மூடப்பட்ட மையங்கள்; திருப்பி அனுப்பப்பட்ட மக்கள்

மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஏன் ஆக்ஸிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது என்பது தெரியவில்லை. ஆனால் முக்கியமான காலகட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு உதவ மாநில அரசு தயார் நிலையில் தான் உள்ளது என்று கூறினார். ஆரம்பத்திலேயே தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன்களை அனுப்புவது குறித்து பேசப்பட்டது என்று கூறினார்.

மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவது பிரச்சனை இல்லை. ஆனால் கட்டாயத்தின் பேரில் அனுப்புவதை எதிர்க்கிறது என்று ராதாகிருஷ்ணன் கூறினார். கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் மருத்துவ ஆக்ஸிஜனில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க : மாநில அரசுகளுக்கு ஒரு விலை; மத்திய அரசுக்கு ஒரு விலை – நியாயமற்றது என கண்டனம்

மற்ற மாநிலங்களுக்கு தற்போதும் நாம் ஆக்ஸிஜனை வழங்கி வருகின்றோம். அதற்கு தடை ஏதும் விதிக்கவில்லை. மற்றவர்களுக்கு ஏற்கனவே அனுப்பிக் கொண்டிருக்கும் போது ஏன் இது போன்ன்ற கட்டாய மாற்றத்தை வழியுறுத்த வேண்டும். இது மேலும் பிரச்சனைகளை வருங்காலத்தில் உருவாக்கும். வியாழக்கிழமை நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசுவது குறித்து தலைமை செயலாளர் முடிவெடுப்பார் என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் நாள் ஒன்றுக்கு உருவாக்கப்படுகிறது. 1200 டன்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டுள்ளது. 240 டன்களை நாள் ஒன்றுக்கு பயன்படுத்துகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu government on compulsory oxygen divert

Next Story
தமிழகத்தில் 13% கோவாக்சின், 9% கோவிஷீல்டு தடுப்பூசிகள் வீண்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com