Pongal 2023: வருடந்தோறும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2021ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 பணம் வழங்கியது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்ததற்கு பிறகு, 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், வருகின்ற 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, ரேஷன் அரிசி அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil