1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழகத்திற்கு 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய 420 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கூட்டங்களுக்கு சேர்த்து ரூ.420 கோடி ஒதுக்கீடு.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் நடவடிக்கை.
பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு.
கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 220 பேருந்துகள், விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்துகள் வாங்க இந்த நிதி ஒதுக்கீடு என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil