Arun Janardhanan
Tamil Nadu government plans 10,000 check dams : நீண்ட தீர்வுகள் காணப்படாமல் இடைக்கால தீர்வுகளால் மட்டுமே இது நாள் வரையில் தமிழகத்தில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு சரி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (10/07/2019) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருங்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டினை தடுக்க 10,000 புதிய தடுப்பணைகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக 312 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொழிலாளிகள் (MNREGA) இந்த அணைகளை கட்டுவதற்காக பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், மிக விரைவாக இதற்கான திட்டங்கள் ஆரம்பமாகும் என்றும், பொறியியல் வல்லுநர்கள் துறைசார் வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக பருவமழை பெய்யத் தவறியதால் இந்த வருட கோடை காலம் மிகவும் மோசமாக இருந்தது. மேலும் இந்த வருடத்தின் பருவமழையும் தாமதமாக துவங்கியதால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து மிக மோசமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தென்மேற்கு பருவமழை காலங்களில் சென்னை சராசரியாக 45 செ.மீ. மழை மட்டுமே பெறும். ஆனால் நீர் நிலைகள் நிரம்புவதற்கு வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் சென்னை உள்ளது. அந்த மழை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தான் தீவிரம் அடையும்.
மேலும் படிக்க :ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர்… இன்று சோதனை ஓட்டம்…
வெகுகாலமாக சென்னையின் நீர் ஆதாரமாக இருந்த பாலாற்றின் அழிவு, நிலத்தடி நீரினை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துதல் ஆகியவை காரணமாக சென்னையில் வறட்சி என்பது மிகவும் சர்வசாதரணமாகிவிட்டது. இது போன்ற ஒரு வறட்சி மிகுந்த சூழலை சென்னை 2001 மற்றும் 2002 ஆண்டுகளில் சென்னை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் செலவில் வேலூரில் இருந்து சென்னைக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 50 ரயில் பெட்டிகளை தமிழக அரசு ராஜஸ்தானிடம் இருந்து பெற்றுள்ளது. ஒவ்வொரு பெட்டியின் கொள்ளளவும் 55 ஆயிரம் லிட்டர்கள் ஆகும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க :
தமிழக அரசின் இந்த திட்டம் மூலமாக தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் முடியும். கடந்த காலங்களில் தமிழகம் எங்கும் 40,000 நீர் ஆதார மையங்கள் இருந்தன. ஆனால் இன்றோ வெறும் 4 ஆயிரம் நீர் ஆதாரங்களே இருக்கின்றன. சென்னையைச் சுற்றிலும் இருந்த 4000 நீர் நிலையங்கள் எங்கே சென்றது என்றும் தெரியவில்லை. நீர் நிலையங்கள் ஆக்கிரமிப்புகள் காரணமாக காணாமல் போனது. பள்ளிக்கரணை போன்ற இடங்கள் குப்பைகளை கொட்டும் இடமாக இருக்கிறது.