தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையின் புறநகரில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திறக்கவிருக்கின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் அடுத்து பத்து புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க இருப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளனர். இந்த திட்டத்திற்கான ருபாய் 115 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள திரூப்பூரில் ரூ. 26 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் ஓசூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளனர்.
வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, அரியலூர், குளச்சல், பொள்ளாச்சி ஆகிய எட்டு நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஓசூர் மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படவுள்ளது. கூடலூர், அரியலூர், வடலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, கொளச்சல் மற்றும் பொள்ளாச்சி பேரூராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil