scorecardresearch

13 தற்காலிக பஸ் நிலையம்; 2000 சிறப்பு பஸ்கள்… திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் தயார்

விதிமீறலைப் புகாரளிக்க 04175-232266 ஹெல்ப்லைனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

tamil nadu bus
Tamil Nadu bus

மே 4-5 தேதிகளில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழாவிற்கு திருவண்ணாமலை கோவில் செல்லும் மக்களுக்காக, சென்னையில் 100 க்கும் மேற்பட்ட இலவச ஷட்டில் சேவைகள் இயக்கப்படும். மேலும், மே 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை எஸ்பி கே.கார்த்திகேயனுடன், ஆட்சியர் பெ.முருகேஷ், அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், 14 கிலோமீட்டருக்கு உள்ள கிரிவலப் பாதையிலும் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

விழாவையொட்டி, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் 2 நாட்களுக்கு வருகைதருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC), வேலூர் கோட்டம், வேலூர், திருப்பத்தூர், ஆற்காடு, சோளிகூர், சென்னை, தாம்பரம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 200 சிறப்புப் பேருந்துகளை இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலைக்கு வரும் 27 ரயில்கள் தவிர, 8 சிறப்பு ரயில்களும் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படும். பார்வையாளர்கள் எளிதாக பயணிக்க உதவும் வகையில், 100க்கும் மேற்பட்ட இலவச ஷட்டில் சேவைகள், பெரும்பாலும் பள்ளி பேருந்துகள், நகருக்குள் இயக்கப்படும்,” என்று கலெக்டர் பி.முருகேஷ் தெரிவித்தார்.

192 குடிநீர் குழாய்கள், 42 ஆர்ஓக்கள், 83 கழிப்பறைகள், 1,218 தெருவிளக்குகள், 445 குப்பைத் தொட்டிகளுடன் கூடிய 33 ஹை மாஸ்ட் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், குறிப்பாக அருணாச்சலேஸ்வரர் கோயிலைச் சுற்றிலும், கிரிவலப் பாதையிலும் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவின் போது நகரின் தூய்மையை உறுதி செய்வதற்காக, 1,620 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிரிவலம் பாதையில் 197 மற்றும் கோவில் வளாகத்தில் 165 உட்பட 486 சிசிடிவி கேமராக்கள், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நகரத்தில் 18 முக்கிய இடங்களை அடையாளம் கண்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக 27 உதவி மையங்களுடன் கிரிவலம் பாதை மற்றும் நகரின் சந்திப்புகள், பரபரப்பான நீட்சிகள், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் 42 கண்காணிப்பு கோபுரங்களையும் போலீசார் அமைத்துள்ளனர்.

விழாவையொட்டி ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தையும் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. ஒரு நபருக்கு 2.5 கிமீ தூரம் வரை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் ₹30 ஆகவும், அதற்கு மேல் ₹50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 950 ஆட்டோ ரிக்‌ஷாக்களில் நிலையான கட்டண ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் திருவிழாவின் போது ஆட்டோ ரிக்‌ஷா கட்டணங்கள் குறித்து பயணிகளுக்கு தெரியப்படுத்த பொது இடங்களில் பேனர்களும் நிறுவப்பட்டுள்ளன.

விதிமீறலைப் புகாரளிக்க 04175-232266 ஹெல்ப்லைனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருவிழாவின் போது நகரத்தில் 85 சுகாதார மேசைகள், ஐந்து பைக் ஆம்புலன்ஸ்கள் உட்பட 15 ஆம்புலன்ஸ்கள் இருக்கும். மொத்தம் 15 வாகனங்கள் மற்றும் 185 தீயணைப்பு வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu government releases special buses chithra pournami