சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடம் மாற்றம் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சிலையை 15 மீட்டர் தொலைவிற்கு இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளை மேற்கொள்ள காந்தி சிலையை இடம் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஒப்புதல் அளித்ததால் இம்மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணியின் 90 சதவீதம் காந்தி சிலைக்கு அருகே நடைபெற உள்ளது.
சென்னை பூந்தமல்லி பைபாஸ் வழிக்கும் கலங்கரை விளக்கத்திற்கும் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் மே மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளதால், கட்டுமானப் பணியின்போது சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, அந்த சிலையை மற்றொரு இடத்தில் வைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil