/tamil-ie/media/media_files/uploads/2018/03/m.k.stalin.jpg)
mk stalin condemn on kendriya vidyalaya school board exam - கேந்திரிய வித்யாலயா தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்விகள் - ஸ்டாலின் கடும் கண்டனம்
லோக் ஆயுக்தா அமைப்பு : லோக் ஆயுக்தா திட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருக்கிறார். லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் உருவாக்கி 128 நாட்கள் ஆன நிலையில் இன்று வரை அதற்கு ஒரு தலைவரை நியமிக்கவில்லை தமிழக அரசு.
லோக் ஆயுக்தா அமைப்பு தலைவரை நியமிக்க வலியுறுத்தல்
அதனை சுட்டிக் காட்டும் வகையில் ஸ்டாலின் பவர் இல்லாத லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி, அதற்கு தலைவரை கூட நியமிக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் தலைவரை நியமிக்க தமிழக அரசும், அமைச்சர்களும் பயப்படுகிறார்களா என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் முக ஸ்டாலின்.
பவர் இல்லாத #Lokayukta அமைப்பை உருவாக்கி 128 நாட்கள் ஆகியும், அதற்குத் தலைவரை நியமிக்காத தமிழக அரசு. ஒருவேளை நியமித்தால் தானும், தன் ஊழல் சகாக்களும் சிக்கிக்கொள்வோம் என அஞ்சுகிறாரா முதல்வர்?
தலைவரை நியமிப்பதுடன், ஊழல் செய்ய ஏதுவான ‘ரகசிய விசாரணை’ விதியையும் ரத்து செய்ய வேண்டும்! pic.twitter.com/8BJ2McUZOl
— M.K.Stalin (@mkstalin) 30 November 2018
திமுக அறிக்கை :
தன்னையும் தன் சகாக்களையும் காப்பாற்றிக் கொள்ள, லோக் ஆயுக்தா அமைப்பை காகிதப் புலி போல் மாற்றி காலில் போட்டு மிதிப்பதா என்று லோக் ஆயுக்தா அமைப்பில் ரகசிய விசாரணை விதியை நீக்கக் கோரி அறிக்கை ஒன்றை திமுக வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.