Advertisment

போக்குவரத்து துறை திடீர் நிபந்தனை: அரசு பஸ்கள் நிற்கும் ஹோட்டல்களில் சைவ உணவு மட்டுமே அனுமதி

Tamilnad News Update : பேருந்துகளை உணவகத்தில் நிறுத்துவது தொடர்பாக அரசு பேருந்து கழகம் புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
2 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு; பணிக்கு வராத பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

Tamilnadu News Update : தமிழகத்தில் பேருந்துகள் உணவகங்களில் நிறுத்துவது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளளது.

Advertisment

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பேருந்துகள், மற்றும் அரசு விரைவு பேருந்துகள் வெளிமாநிலம் அல்லது தொலைதூரம் உள்ள வெளி மாவட்டங்களுக்கு செல்லும்போது வழியில் உணவகங்களில் பேருந்தை நிறுத்துவது வழக்கமான நிகழவு. அந்த நேரத்தில் உணவு அருந்துவது, கழிவரை செல்வது உள்ளிட்ட வேலைகளில் பயணிகள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஈடுபடுவர்கள்.

இதில் பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு தெரிந்த உணவக்த்தில் மட்டுமே பேருந்தை நிறுத்துவதாகவும், அங்கு வாங்கும் பொருட்கள் அனைத்தும் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அடிக்கடி புகார் எழுந்ததை தொடர்ந்து, பேருந்துகளை உணவகத்தில் நிறுத்துவது தொடர்பாக அரசு பேருந்து கழகம் புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசுப்பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்துவது தொடர்பாக ஒரு வருடத்திற்கான உரிமம் வழங்குவதற்காக நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உணவகத்தில் பரிமாறப்படும் உணவுகள் தரமானதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும்.

கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ கழிவறை இருக்க வேண்டும்.

உணவகத்தில் மின் இணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்.

உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் எம்ஆர்பி விலையை விட அதிகமாக விற்க கூடாது.

பயணிகள் வாங்கும் பொருட்களுக்கு கம்யூட்டர் பில் வழங்கப்பட வேண்டும் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

பயணிகளின் பாதுகாப்பு கருதி உணவக வளாகத்தில் சிசிடிவி கேமராககள் பொருத்தப்பட வேண்டும். உணவு பொருட்களின் விலைப்பட்டியல் பயணிகளுக்கு தெளிவாகதெரியும்படி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment