தமிழகத்திற்கு உலகத்தரமான விமான நிலையங்கள் தேவை என்றும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க., எம்.பி., வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் எம்.பி.வில்சன் கூறியதாவது, "'விமான நிலையங்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். வளர்ச்சியை உருவாக்குவதில் முதல் மூன்று இடங்களில் உள்ள தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையங்களுக்கு தகுதியானது.
மாநிலத்தின் தலைநகரான சென்னை, மாநிலத்தில் அதிக உள்நாட்டு மற்றும் சர்வதேச போக்குவரத்தைக் கொண்டுள்ளது, இருப்பினும் சென்னை விமான நிலையம் நவீனத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
டெல்லி, பம்பாய் அல்லது பெங்களூருடன் ஒப்பிடுகையில், சென்னை விமான நிலையம் வணிகத்தை இழந்து வருகிறது. சென்னையை தென்னிந்தியாவின் வணிக மையமாக மாற்றும் வகையில், அல்ட்ரா மாடல் சர்வதேச வசதிகளுடன் திட்டமிடப்பட்ட இரண்டாவது விமான நிலையத்தை நிறுவுவதற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
இதனால், சென்னையில் இரண்டாவதாக வரவிருக்கும் பரந்தூர் விமான நிலையத்தை கட்டும் பணிகளை மிக விரைவாக ஆரம்பிக்க வேண்டும்.
முன்னறிவிக்கப்பட்ட தேவைகள் சென்னைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரைக்கும் பொருந்தும். மதுரை திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 13 தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களின் நுழைவாயிலாக மதுரை திகழ்கிறது. அடுத்த திட்டத்தினை அந்த நகரத்தை மேம்படுத்த கலந்துரையாட வேண்டும்", என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil