Madras High Court | அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் கடந்த காலங்களில் இது தொடர்பாக வெளியான பல்வேறு தீர்ப்புகளையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். மேலும் வழக்கு தொடர்பாக நீதிபதிகள், “அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தால் மட்டும் தீர்வு ஏற்படாது. பேருந்து உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில், “சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபராதத்தை ₹50,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு பதில் அளித்தது.
தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“