Tamil Nadu governor can make decisions on Perarivalan release : பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாகவும், சட்டபடியும் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசின் உள்துறை சார்பில் நீதிமன்றத்தில் தகவல். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
அரசின் அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யமால் சட்டவிரோத அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேரறிவாளன், தமிழக ஆளுநரிடம் அளித்த கருணை மனு நிலுவையில் உள்ளதாகவும், அதில் சட்டப்படி முடுவெடுக்க ஆளுனருக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழுவர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுனர் முடிவெடுக்கலாம் என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நளினி தன்னை நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்ற இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் எனவே நளினியின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை நளினி மற்றும் அரசு தரப்பு வாதங்களுக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"