Advertisment

கால்டுவெல், பிஷப் போப் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க நினைத்தவர்கள்; ஆளுநர் ஆர்.என்.ரவி

வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்னை உருவானது; ஆளுநர் ஆர்.என்.ரவி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RN Ravi Vallalar

வள்ளலார் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (புகைப்படம் – ட்விட்டர் ராஜ்பவன் தமிழ்நாடு)

வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் தான் பெரிது என்றபோது தான், பிரச்னை உருவானது என கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் என விமர்சித்துள்ளார்.

Advertisment

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதையும் படியுங்கள்: அண்ணாமலை பல்கலையில் ஆளுநர் யோகாசனம்; கருப்புக்கொடி அச்சத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழாவில் கலந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்படைந்தேன். 200 ஆண்டுகளுக்கு முன் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளானபோது தோன்றியவர்தான் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது.

அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள். அடிப்படையில் உண்மை என்பது ”ஒரு பரமேஸ்வரன், அவன் படைத்த மனிதன், விலங்குகள், செடி, கொடிகள் என அனைத்தும் ஒரே குடும்பம். இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களின் உடையும், தோற்றமும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், உங்களில் என்னையும் என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம்.” சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் கூற்று சனாதன தர்மத்தின் எதிரொலி.

ஆன்மிகத்தில் உயர்ந்த நாடு இந்தியா. பாரத தேசத்தில் ஆயிரக்கணக்கான மார்க்கங்கள், வழிபாட்டு முறைகள் இருந்தன. யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அதைத்தான் சனாதன தர்மம் போதிக்கிறது. இந்தநிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது. இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்னை உருவானது.

பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். இந்திய சமூகக் கட்டமைப்பைக் குறைக்க நினைத்த கார்ல் மார்க்ஸ் ஆங்கிலேயருக்கு உதவியவர். இந்தியர்களை பற்றி தவறாக எழுதி வைத்திருப்பவர் காரல் மார்க்ஸ். வள்ளலார் சனாதனத்தைப் பற்றி தெளிவாக கூறியுள்ளார். ஆனால், சிலர் தவறாக தெரிவிக்கின்றனர். நானும் வள்ளலாரின் பக்தன் தான். வள்ளலாரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்புவோம். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment