இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது; ஆளுநர் ஆர்.என்.ரவி

சுதந்திரத்திற்காக போராடும்போது நாம் ஒற்றுமையாக இருந்தோம். தற்போது அவரவர் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து கிடக்கிறோம்; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சுதந்திரத்திற்காக போராடும்போது நாம் ஒற்றுமையாக இருந்தோம். தற்போது அவரவர் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து கிடக்கிறோம்; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

author-image
WebDesk
New Update
RN Ravi

சுதந்திரத்திற்காக போராடும்போது நாம் ஒற்றுமையாக இருந்தோம். தற்போது அவரவர் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து கிடக்கிறோம்; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு (கோப்பு படம்)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Advertisment

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், கடந்த 1949 ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாவது; "இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அரசமைப்புச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்.

Advertisment
Advertisements

சுதந்திரத்திற்காக போராடும்போது நாம் ஒற்றுமையாக இருந்தோம். தற்போது அவரவர் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து கிடக்கிறோம். மாநிலங்கள் என்ற அளவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துக்கள் இங்கே உள்ளன. தற்போதைய காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது." இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: