சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை; ஆர்.என்.ரவி

தமிழகத்தில் சனாதன தர்மம் வளம் பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளன; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் சனாதன தர்மம் வளம் பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளன; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

author-image
WebDesk
New Update
RN Ravi (6)

தமிழகத்தில் சனாதன தர்மம் வளம் பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளன; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை அண்ணா நகரில் தனியார் அமைப்பு சார்பில் 'சனாதன உத்சவ்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் சனாதன தர்மம் வளம் பெற்றதாக தெரிவித்தார்.

மேலும், "இந்தியா என்பது பாரத் என அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். சனாதனத்தில் எல்லாம் உள்ளது. இலை இல்லாமல், கிளை இல்லாமல் மரம் வாழலாம், ஆனால் வேர் இல்லாமல் மரம் வாழ முடியாது. இப்படி மரத்தின் அடி வேர் போல் இருப்பது சனாதனம். சனாதனத்தின் அடிப்படை அத்தியாயம் நம் வேதங்களில் உள்ளது. சனாதன தர்மம் உலகின் தேவையாக உள்ளது. ஆனால் நாட்டை உடைக்கப் பார்ப்பவர்கள் சனாதனத்திற்கு எதிராக பேசுகின்றனர்

சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. நாம் அனைவரும் சமம் என்று நமது வேதம் கூறுகிறது. தமிழகத்தில் சனாதன தர்மம் வளம் பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளன. தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர், திருநெல்வேலி மாவட்டம் மானூர் உள்ளிட்ட பல இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளில் சனாதனம் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

Advertisment
Advertisements

சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், உங்களால் முடிந்தால் முதலில் இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் சென்று அழித்துப் பாருங்கள். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர். ஆனால் யாராலும் அதை அழிக்க முடியவில்லை." இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Governor Rn Ravi Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: