Advertisment

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சென்னையில் முக்கிய மாற்றங்களை கவனிங்க!

தாம்பரம், பெருங்களத்தூர் வழியை தவிர்க்கவும்; தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர்களுக்கு அரசு அறிவுறுத்தல்; சென்னையில் பேருந்து முன்பதிவு மையங்களும் திறப்பு

author-image
WebDesk
New Update
news

தாம்பரம், பெருங்களத்தூர் வழியை தவிர்க்கவும்; தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர்களுக்கு அரசு அறிவுறுத்தல்; சென்னையில் பேருந்து முன்பதிவு மையங்களும் திறப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Advertisment

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்யும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால், பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி சென்று வர சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவிக்கும்.

அந்தவகையில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் இயக்கப்படும். தமிழகம் முழுவதும் மொத்தம் 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னையில் இருந்து இயக்கப்படும் 6,300 வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 4,675 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக நவம்பர் 13 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதற்காக சென்னையில் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து பயண முன்பதிவிற்காக சென்னை 11 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன. தற்போது வரை 68000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னையில் இருந்து கார் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சொந்த ஊர் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, திருப்போரூர்- செங்கல்பட்டு வழி அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment