சேலம் சமூக ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பியூஸ் சேலத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்ற நீதித்துறை நடுவர் யுவராஜ், அண்ணாமலை மீது இரண்டு சமுதாயத்திற்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அரசின் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்தநிலையில், சேலம் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் பியூஸ் அளித்த புகாரின் பேரில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர, அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.
அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. தொடர்ந்து, அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“