தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் திங்கள்கிழமை (13.11.2023) விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வறுவதால், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சனி ஞாயிறு மட்டுமே விடுமுறையாக இருந்தது. ஆனால், பலரும் தீபாவளிக்கு மறுநாள் கௌரி விரதம், நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னை போன்ற மாகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடிவிட்டு உடனடியாக திரும்ப முடியாத சூழ்நிலையும் போக்குவரத்து சிக்கலும் ஏற்படும். அதனால், தீபாவளிக்கு மறுநாள் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் திங்கள்கிழமை (13.11.2023) தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “இந்த ஆண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“