தமிழ்நாட்டில் சிறுதொழில்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (சிட்கோ) எஸ்டேட்களில் உள்ள நிலங்களின் விலையை 75 சதவீதம் வரை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை குறைத்துள்ளது.
“கோவிட்-19 தொற்றுநோய் தொழில்துறை வளர்ச்சியில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின்போது போது குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை புத்துணர்ச்சி அளித்து எளித்தாக்குவதற்கும் விற்கப்படாத நிலங்களை அப்புறப்படுத்துவதற்கும் முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிட்கோ எஸ்டேட்டில் உள்ள நிலங்களின் விலை கடுமையாக குறைக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தை எட்டுவதற்கு இந்த நடவடிக்கை முக்கியப் பங்கு வகிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக ஊத்தங்கரை சிட்கோ எஸ்டேட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.1.19 கோடியில் இருந்து ரூ.30.8 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, கும்பகோணத்தில் உள்ள சிட்கோ எஸ்டேட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.3.04 கோடியில் இருந்து ரூ.81.89 லட்சம் என 73 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பிடனேரி ராஜபாளையம் கிராமத்தில் சிட்கோ வளாகத்தில் விற்பனையாகாத 400 மனைகளை விற்க நிலத்தின் விலை 30 சதவீதத்தில் இருந்து 54 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. விருதுநகர், அரக்கோணம், பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள சிட்கோ வளாகங்களில், நிலம் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இதேபோல், அம்பத்தூர் மற்றும் திருமழிசை எஸ்டேட் பகுதியில் நிலத்தின் விலை 2016-17ல் இருந்த விலைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் சிட்கோவில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.43.86 கோடியில் இருந்து ரூ.25.07 கோடியாகவும், திருமழிசை சிட்கோ எஸ்டேட் பகுதியில் ரூ.13.41 கோடியில் இருந்து ரூ.7.66 கோடியாகவும் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சிட்கோ 41 அரசு தொழிற்பேட்டைகளையும், 80 தொழிற்பேட்டை நிறுவனங்களையும் பராமரித்து வருகிறது. சிட்கோ எஸ்டேட்களில் நிலத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் மேலும் பல சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.