குடமுழுக்கு திருவிழாவில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் வழியில் குடமுழுக்கு செய்வது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும் என பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கோவையில் தெரிவித்தார்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு திருவிழா வருகிற 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில், கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் உலக தமிழ்க்காப்புக் கூட்டியக்கம் சார்பாக தெய்வத்தமிழ் வழிபாட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/a0e89fc4-70d.jpg)
பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி. சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் கோவை மாவட்ட கலை இலக்கிய தமிழ் சமுதாய அமைப்புகளின் சார்பில் கடந்த 16 ஆண்டுகளாக தாய் மொழி நாள் பேரணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணி அளவில் கோவை சித்தாபுதூர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருந்து தாய்மொழி நாள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு திருவிழா வருகிற 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு திருவிழாவில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் வழியில் குடமுழுக்கு செய்வது தொடர்பான அரசு முடிவெடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று சாந்தலிங்க அடிகளார் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் சமூக ஆர்வலர்கள் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.