/tamil-ie/media/media_files/uploads/2017/07/MK-Stalin-7.jpg)
Tamil Nadu govt defamation case against MK Stalin, மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு, நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு, mk stalin, dmk president mk stalin, chennai Court ordered to appear, court summon to mk stalin
தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்கில், பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4 ஆம் தேதிகளில் ஆஜராக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசையும் முதல்வரையும் விமர்சித்ததாகவும், தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கபட்டது குறித்தும் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதேபோல குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும் விமர்சித்தது என ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, முதல்வரை விமர்சித்தது, குடியுரிமை சட்டம் தொடர்பாக அரசை விமர்சித்தது ஆகிய இரு வழக்குகளில் மார்ச் 4-ம் தேதியும், உள்ளாட்சி துறை அமைச்சரை விமர்சித்தது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 24-ம் தேதியும் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.