scorecardresearch

முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருள் வழங்க ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், முழு ஊரடங்கை ஜூன் 7ம் தேதி வரை மேலும் ஒருவாரம் நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருள் வழங்க ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு வருகிற மே 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 35 ஆயிரத்துக்கும் மேலும், உயிரிழப்பு 400க்கும் மேல் என்ற அளவில் பதிவாகி வருகிறது. அதனால், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தமிழக அரசு கடந்த மே 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவித்தது. மே 31ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், முழு ஊரடங்கை ஜூன் 7ம் தேதி வரை மேலும் ஒருவாரம் நீட்டித்து என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வரஸ் நோய்த் தொற்று பவரலைத் தடுப்பதற்காக, மத்ஹ்டிய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் மே 25, 2020 முதல் தெசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே 22, 2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கலுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கும் வரும் மே 31ம் தேதி காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த்தொற்றின் தன்மயினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும் இந்த முழு ஊரடங்கு ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வர இமேலும் ஒரு வாரத்திக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாடம் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யவும் ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர, பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்துஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வ்ழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu govt extends lockdown until june 7th announced by cm mk stalin

Best of Express