பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பனை விதை விதைக்கும் பணி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், பசுமை தமிழகம் என்ற திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் மரங்கள் நடும் பணிகள் தொடர்ந்து வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் 10 கோடி பனை விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பனை விதை விதைக்கும் பணிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் தொடங்கி வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில் பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எர்ணாவூர் நாராயணன், தமிழகத்தில் தற்போது 4 கோடி பனைமரங்கள் உள்ளன. அடுத்தப்படியாக, ஏரிக்கரை, குளக்கரை, வாய்க்கால் போன்ற பகுதிகளில் பனைவிதை விதைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 342 இடங்களில் பனைவிதை விதைக்கும் பணிகள் நடைபெற்றது. ஒரே நாளில் ஒரு கோடி பனைவிதைகள் விதைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர், என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“