/tamil-ie/media/media_files/uploads/2022/12/Secretariate.jpg)
தமிழ்நாடு தலைமை செயலகம்
தமிழ்நாட்டில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு. இந்த நிகழ்ச்சியில் குறவன், குறத்தி வேடமிடும் கலைஞர்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இது குறவர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் இருப்பதாக தமிழக குறவர், மலைக் குறவர் இன மக்கள் உள்ளிட்ட பழங்குடியின சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து தமிழக அரசும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவில், , "தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில் இடம்பெற்றுள்ள குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது.
எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. குறவன், குறத்தி ஆட்டம் எந்த ஒரு கலை நிகழ்ச்சியிலும் நடைபெறவில்லை என்பதை கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் உறுதிப்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.