/tamil-ie/media/media_files/uploads/2023/06/Kovai-quarry-association.jpeg)
கோவை க்ரஷர்ஸ் மற்றும் குவாரி கூட்டமைப்பினர்
கிரஷர்ஸ் மற்றும் குவாரி கூட்டமைப்பின் வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 1300 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பாகி உள்ளது என கோவையில் கிரஷர்ஸ் மற்றும் குவாரி கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தி இந்தியன் சேம்பர்ஸ் அரங்கில் கிரஷர்ஸ் மற்றும் குவாரி கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் லைசன்ஸ் பெற்ற குவாரிகள் 450; அனுமதி இல்லாத குவாரிகள் 3000: மோட்டார் சம்மேளனம் ஷாக் புகார்
இந்த செய்தியாளர் சந்திப்பில் கோவை மாவட்ட தலைவர் சந்திர பிரகாஷ் கூறியதாவது, மைனிங் பிளான் முறையில் உரிய sincrage fees செலுத்தி உற்பத்தி திறன் மற்றும் தேவைக்கேற்றவாறு எவ்வளவு வேண்டுமானாலும் கனிமத்தை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். கட்டுமான பொருட்கள் தங்கு தடை இன்றி வழங்க, தொழிலைத் தொடர்ந்து நடத்த அரசு உதவி செய்ய வேண்டும்.
முறையாக லைன்சென்ஸ் எடுத்தும் பணி செய்யும் நிறுவனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். முதல்வர் மற்றும் துறை அமைச்சர் கேன்சர் நிலையில் உள்ள கிரஷர் தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். கட்டுமானத் துறையின் முதுகெலும்பாக உள்ளது கிரஷர்ஸ். மற்ற மாநிலங்களை விட ஜல்லி மணல் குறைவான விலைக்கு விற்கிறோம். எங்களது ஸ்ட்ரைக் தொடர்ந்தால் இரு மடங்கு விலை ஏற்றம் ஆகும்.
இந்த ஸ்ட்ரைக்கால் 33 லட்சத்து 80 ஆயிரம் பேர் இரண்டு நாளில் வேலை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 1300 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பாகி உள்ளது. வேலை நிறுத்தத்தால் பணியில் இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பதினைந்தாயிரம் பேர் வெளியே சென்றுள்ளனர். போராட்டம் தொடர்ந்தால் உள்கட்டமைப்பு பாதிக்கப்படும்.
கிரஷர்ஸ் மற்றும் குவாரியை தமிழ்நாட்டில் 7150 பேர் நிறுவனமாக இயக்கி வருகின்றனர். இந்த தொழிலை நம்பி மொத்தமாக 29 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தகவல் தெரிவித்து வர வேண்டும். பாறைக்கு வேட்டு வைக்கும் போது வெடித்து விட்டால் என்ன செய்வது? ஆபத்து என்பதால் தெரிவிக்கிறோம். அதிகாரிகள் போல போலியாக வந்து வெடி மருந்து யாராவது எடுத்து சென்றால் என்ன செய்வது? எங்களை திருடன் போல அதிகாரிகள் பார்கின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் எங்களது தனிப்பட்ட தகவல்களை கேட்டு மிரட்டுகின்றனர். அதற்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.