Advertisment

பண்டிகை கால ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு; புதிய கட்டண விவரம் இங்கே

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைப்பு; புதிய கட்டண முறையில் எந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம்? முழுவிவரம் இங்கே

author-image
WebDesk
New Update
omni buses

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைப்பு; புதிய கட்டண முறையில் எந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம்? முழுவிவரம் இங்கே

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 5% கூடுதலாக குறைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சென்னை போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவர். ஆனால், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்திருந்தாக அடிக்கடி புகார் எழுந்தது. இதனை குறைக்க தமிழக அரசு சார்பில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

அந்தவகையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 5% குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர். கடந்த ஆண்டு கட்டணத்தில் 25% கட்டணம் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 5% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று கூறினார்.

அதன்படி, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிலவரம்

சென்னை – திருச்சி; குறைந்தபட்சம் ரூ.1325 ஆகவும், அதிகபட்சம் ரூ.1841 ஆகவும் நிர்ணயம்

சென்னை – மதுரை; குறைந்தபட்சம் ரூ.1688 ஆகவும், அதிகபட்சம் ரூ.2554 ஆகவும் நிர்ணயம்

சென்னை – சேலம்; குறைந்தபட்சம் ரூ.1363 ஆகவும், அதிகபட்சம் ரூ.1895 ஆகவும் நிர்ணயம்

சென்னை – கோயம்புத்தூர்; குறைந்தபட்சம் ரூ.1725 ஆகவும், அதிகபட்சம் ரூ.2874 ஆகவும் நிர்ணயம்

சென்னை – திருநெல்வேலி; குறைந்தபட்சம் ரூ.1960 ஆகவும், அதிகபட்சம் ரூ.3268 ஆகவும் நிர்ணயம்

சென்னை – நாகர்கோவில்; குறைந்தபட்சம் ரூ.2211 ஆகவும், அதிகபட்சம் ரூ.3765 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment