/tamil-ie/media/media_files/uploads/2022/06/MSME-Strike.jpg)
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் பயன்பாட்டைப் பொறுத்து 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பீக் ஹவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு; அரசாணை வெளியீடு
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான பீக் ஹவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மின் பயன்பாட்டைப் பொறுத்து 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பீக் ஹவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக, தமிழக அரசு பருவகால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு (LT IIIB வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழில் நிறுவனங்கள்) தினசரி கட்டணங்களை (பீக் ஹவர் மின்சார கட்டணம்) 25% முதல் 15% வரை குறைத்துள்ளது மற்றும் சோலார் ரூஃப் டாப் நெட்வொர்க் கட்டணங்களை 50% குறைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாணையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு மானியம் வழங்குவதற்குத் தேவையான கொள்கை ஆணையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வழங்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறைக்கு உத்தரவிடப்பட்டது.”
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்காததற்கும், சோலார் ரூஃப் டாப் நெட்வொர்க் கட்டணங்களைக் குறைப்பதற்கும் மின்வாரியத்துக்கு ரூ.196.10 கோடி மானியம் வழங்க தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், மாநிலம் முழுவதும் 3.37 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.