Advertisment

ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை: குவியும் புதிய குடும்ப அட்டை விண்ணப்பம்; அரசு திடீர் தடை

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்; புதிய ரேசன் அட்டை விண்ணப்பத்திற்கு தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rs 1000 monthly for women household, Tamilnadu, Tamil Nadu Got, Ration card PHH, AYY, NPHH, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, உரிமைத்தொகை பெறத் தகுதியானவர்கள் யார், who are elegible women household, rs 1000 monthly

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்; புதிய ரேசன் அட்டை விண்ணப்பத்திற்கு தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில், குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையைப் பெறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட, தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்: மகளிர் உரிமைத் தொகை திட்டம்: சென்னை ஆணையர் முக்கிய தகவல்

இந்த மகளிர் உரிமைத் தொகையை பெற ஆண்டு வருமானம் உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குடும்ப அட்டையில் உள்ள தகவலை வைத்து குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும். இந்தநிலையில், பலர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்து வருகின்றனர்.

இதனால் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை முழுமையாக பெறும் வரை குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டாம் என ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பெயரை நீக்குவதற்கான காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் அதனை பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Stalin Kalaignar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment