ரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம்: தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10,055 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

Tamil Nadu CM signs 14 MoUs worth rs 10055 crore, tamil nadu govt signs 14 mous, தமிழகத்தில் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.10,055 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம், rs 10055 crore investments, தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம், 7000 over employment opputunities, tamil nadu, chennai, oragadam, tirupur, thenkasi, thiruvallur

தமிழகத்தில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10,055 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழகத்தில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10,055 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்டங்கள் இந்த திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. இந்த 14 திட்டங்களில், முதலில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு திட்டங்களுக்கு ஆன்லைனில் புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூரில் 810 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக ஜே.எஸ்.டபிள்யூ ரினியூ எனர்ஜி லிமிடெட் நிறுவனம் ரூ.6,300 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ராமேஸ்வரம் 50 மெகாவாட் காற்றாலை மின்சார திட்டத்தைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனங்கள்2,420-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிராநந்தனி குழுமத்தின் ஒரு பகுதியான க்ரீன்பேஸ் இண்டஸ்டிரியல் பார்க்ஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ஒரு தொழில்துறை தளவாட பூங்காவை நிறுவுகிறது. இந்த திட்டத்தில் ரூ.750 கோடி முதலீட்டை முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 பேர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மந்த்ரா டேட்டா செண்டர் 550 பேர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், சென்னை அருகே ஒரு டேட்டர் செண்ட்டர் திட்டத்தை அமைப்பதற்காக ரூ.750 கோடியை முதலீடு செய்யவுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த ஆவோஷெங் ஹைடெக் லிமிடெட் நிறுவனம் 250 பேர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், கார்பன் ஃபைபர் தகடுகளை தயாரிப்பதற்கு சென்னை அருகே ரூ.200 கோடி முதலீடு செய்ய உள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த வேன்ஸ் கெமிஸ்ட்ரி, நிறுவனம் மின் குப்பைகளை அகற்றுவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் ஒரு மின் கழிவு மேலாண்மை வசதியை அமைக்க ரூ.50 கோடி முதலீட்டில் சுமார் 750 பேர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முன்வந்துள்ளது. அந்நிறுவனம, விலைமதிப்பற்ற உலோகங்கள் சுத்திகரிப்பு திட்டத்தையும் நிறுவ முன்வந்துள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் சில நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளுடன் தங்கள் ஆலைகளை விரிவுபடுத்தப் போவதாக தெரிவித்துள்ளன. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் டயர்கள் தயாரிப்பதற்கான விரிவாக்க திட்டத்தை நிறுவ அப்பல்லோ டயர்ஸ் முன்மொழிந்துள்ளது. அந்நிறுவனம் இந்த விரிவாக்க திட்டத்தில் ரூ.505 கோடி முதலீடு செய்ய உள்ளது.

அமெரிக்காவின் டிபிஐ காம்போசைட்ஸ் நிறுவனம், ரூ.300 கோடி முதலீட்டில் சென்னை அருகே ஒரகடத்தில் காற்றாலைகளை தயாரிப்பதற்கான விரிவாக்க திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே, அதன் அசல் திட்டத்திற்காக உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2019இன் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

திருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில், பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா தனது ஆலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.250 கோடி கோடி மதிப்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. பிரிட்டானியா ஏற்கனவே அதன் முதல் கட்ட திட்டத்திற்காக உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2019-இன் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ரூ.109 கோடி முதலீட்டில், தென் கொரியாவின் ஹூண்டாய் வியா சென்னை அருகே ஸ்ரீபெரம்புதூரில் தனது வசதியை விரிவுபடுத்த உள்ளது.

கவுண்ட்டர் மெஷர்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.51 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை தளத்தில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவமனைகள் முழுவதும் COVID-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்று மாநில அரசு கூறியுள்ளது. ஐனாக்ஸ் ஏர் தயாரிப்புகள், ஓசூரில் திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது..

லி-எனர்ஜி நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் ஈ.வி. பேட்டரிகளை தயாரிப்பதற்கான திட்டத்தை நிறுவ முன்மொழியப்பட்டது; திருவள்ளூரில் வாகன சுவிட்சுகள் தயாரிப்பதற்காக தென் கொரியாவின் எல்.எஸ். ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் ரூ.250 கோடி மதிப்புள்ள திட்டத்தை நிறுவ முன்வந்துள்ளது. கிரின் டெக் மோட்டார்ஸ் & சர்வீசஸ் நிறுவனம் ரூ.90 கோடி முதலீட்டில் அம்பத்தூரில் பேட்டரி மற்றும் பி.எம்.எஸ் தயாரிப்பதற்கான திட்டத்தை நிறுவ முன்மொழிந்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்களை அறிவிப்பதற்கு முன், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக தொழில்துறை செயலாளர் என்.முருகானந்தம் சுட்டிக்காட்டினார். “2020 ஆம் ஆண்டில் (செப்டம்பர் வரை), ரூ.31,464 கோடி மதிப்புள்ள 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அரசு கையெழுத்திட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu govt signs 14 mous worth rs 10055 crore investments makes 7000 over employment opputunities

Next Story
திமுக பிரமுகர் கே.கே.நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு: மருத்துவமனையில் அனுமதிDMK Chief Executive Member dhanasekaran, kk nagara dhanaseakaran attacked by rowdys, திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு, கேகே நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு, திமுக, தனசேகரன், சென்னை, dmk kk nagar dhanasekaran attacked by un identified persons, kk nagar, dmk Executive Member dhanasekaran, dhanasekaran kk nagar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com