முன்னாள் பிரதமர் வி.பி. சிங், சமூக நீதிக்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில், அவரது திருவுருவ சிலை சென்னையில் நிறுவப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஏப்.20) தெரிவித்தார்.
தொடர்ந்து, காவிரி நதீநீர் நடுவர் மன்றத்தை அமைத்தவர் சிங் என்றும் சென்னை விமான நிலையத்துக்கு தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல் அமைச்சருமான சி.என். அண்ணாத்துரை பெயரை சர்வதேச விமான நிலையத்துக்கு கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சூட்டினார். உள்நாட்டு முனையத்துக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.
இதையடுத்து வி.பி. சிங்-ஐ சமூக நீதியின் நாயகன் எனப் போற்றிய மு.க. ஸ்டாலின், அவர் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த போதிலும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தார்.
பிபி மண்டல் தலைமையிலான இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசுப் பணிகளில் ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் அவர்தான்” என்றார்.
தொடர்ந்து, “முன்னாள் பிரதமர் தமிழர் நலனுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் நின்றார்” என்று கூறிய மு.க. ஸ்டாலின், பெரியாரை தம் தலைவராக வி.பி.சிங் ஏற்றுக் கொண்டார் என்றும் கருணாநிதியை தமது சகோதரனாக கருதினார் என்றும் கூறினார்.
இதற்கிடையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும் கட்சியின் ஐ.டி. விங் செயலாளருமான டிஆர்பி ராஜா, “முன்னாள் பிரதமரின் பேத்திகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கும் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“