உளவுத் துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகர காவல் ஆணையரும் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காவல் தலைமையக ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழா; கருப்பு சட்டை அணிந்து வரக் கூடாது என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது அரசு
ஆவடி மாநகர காவல் ஆணையர் அருண், சென்னை சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஐ.பி.எஸ், ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஏ.டி.ஜி.பி லெவலில் இருந்த உளவுத்துறை, ஐஜி அளவிலான லெவெலில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil