/tamil-ie/media/media_files/uploads/2023/04/Secretariate.jpg)
TN Secretariat
தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளராக சிகி தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சிறு தொழில் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: ‘கண்ணில் மருந்து போட்டிருந்தேன்; தவறுதலாக ஃபார்வேர்ட் செய்து விட்டேன்’: எஸ்.வி சேகர் மனுவை ஏற்காத உச்ச நீதிமன்றம்
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராக அனந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் வாரியத் (TRB) தலைவராக ஸ்ரீ வெங்கட் பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக பூஜா குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய்த்துறை கூடுதல் ஆணையராக பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளராக கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் வாரிய செயல் இயக்குனராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மோனிகா ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.