ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்: 3 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்: திருநெல்வேலி புதிய கமிஷனராக மகேஸ்வரி நியமனம்; தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்: திருநெல்வேலி புதிய கமிஷனராக மகேஸ்வரி நியமனம்; தமிழக அரசு உத்தரவு

author-image
WebDesk
New Update
TN Sec

தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்: திருநெல்வேலி புதிய கமிஷனராக மகேஸ்வரி நியமனம்; தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Advertisment

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு மாவட்ட துணை கலெக்டராக இருந்த லட்சுமிபதி ஐ.ஏ.எஸ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட இயக்குனராக இருந்த தங்கவேல் ஐ.ஏ.எஸ், கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment
Advertisements

கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த பிரபுசங்கர் ஐ.ஏ.எஸ், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிப்கோ மேலாண் இயக்குனராக இருந்த சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆணையராக இருந்த வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த செந்தில் ராஜ் ஐ.ஏ.எஸ், சிப்கோ மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ் ஐ.ஏ.எஸ், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலான் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்த ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஐ.ஏ.எஸ், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்த ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

குடிமைப் பணிகள் சி.ஐ.டி டி.ஜி.பி வன்னியப்பெருமாள், ஊர்க்காவல் படை கமாண்டண்ட்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஐ.ஜி தமிழ் சந்திரன் ஐ.பி.எஸ், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக இருந்த செந்தில் குமாரி ஐ.பி.எஸ், சென்னை குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த மகேஸ்வரி ஐ.பி.எஸ், நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமி இணை இயக்குநர் ஐ.ஜி ஜோஷி குமார் ஐ.பி.எஸ், குடிமைப் பணிகள் சி.ஐ.டி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்பு பட்டியலில் இருந்து தீஷா மிட்டல் ஐ.பி.எஸ், சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவுக்கு டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் ஐ.பி.எஸ், சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக இருந்த பி.சாமூண்டீஸ்வரி ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி காவல்துறை தலைமையகத்தின் டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த சுரேஷ் குமார், தென்காசி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி எஸ்.பியாக இருந்த சாம்சன் ஐ.பி.எஸ், சென்னை போதைப்பொருள் தடுப்பு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை சி.பி.சி.ஐ.டி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார், திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், கரூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த சுந்தரவதனம் ஐ.பி.எஸ், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக இருந்த டி.என்.ஹரி கிரண் பிரசாத், கடலோர பாதுகாப்பு படை (ராமநாதபுரம்) எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலோர பாதுகாப்பு படை (ராமநாதபுரம்) எஸ்.பியாக இருந்த பி.சுந்தரவடிவேல் நீலகிரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை டி.ஜி.பி தலைமையக எஸ்.பியாக காத்திருப்பு பட்டியலில் இருந்த தீபா சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: