Advertisment

பள்ளி கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன்; 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

வணிக வரித்துறை ஆணையர் மாற்றம்; பள்ளிக்கல்வி, சுற்றுலாத் துறைகளுக்கு புதிய செயலாளர்கள்; 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

author-image
WebDesk
Oct 12, 2023 16:43 IST
New Update
TN Sec

வணிக வரித்துறை ஆணையர் மாற்றம்; பள்ளிக்கல்வி, சுற்றுலாத் துறைகளுக்கு புதிய செயலாளர்கள்; 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

வணிக வரித் துறை ஆணையராக இருந்த தீரஜ் குமார், தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக இருந்த குமரகுருபரன், பள்ளிக்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குமரகுருபரன் நிதித்துறை (செலவினங்கள்) கூடுதல் செயலாளராகவும் செயல்படுவார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா, சுற்றுலாத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காகர்லா உஷா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Tamil Nadu #Ias Officer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment