Advertisment

தேர்தல் நெருக்கத்தில் அரசு பஸ் ஸ்டிரைக் ஏன்? தொமுச பொருளாளர் பேட்டி

திமுகவின் தொமுச பொருளாலர் கி.நடராஜன், “தமிழக அரசு அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகத்தின் வருமானத்துக்கும் செலவுக்கும் இடையே இருக்கிற இடைவெளியை சரி செய்ய தமிழக அரசு நிதியளிக்க வேண்டும்.” என்று கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu govt transport corporation employees, தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக், பஸ் ஸ்டிரைக், bus strike, lpf, dmk, citu, cipi, transport employee unions announced strike from feb 25

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு அரசு போக்குரவத்துக் கழகத்தில் 21,000 பேருந்துகள் உள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் 1 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கங்கள் கூறுகின்றன. இதனால், அரசு பேருந்து போக்குவரத்தில் 80% பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

இந்த வேலை நிறுத்தத்தில், எதிர்க்கட்சிகளான திமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் மட்டும்தான் வேலை நிறுத்தம் செய்வார்கள் என்பதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், எந்த தாமதமும் இல்லாமல் வழக்கமான நேரப்படி பேருந்துகள் இயக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறது.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக துறை அதிகாரிகள் கூறுகையில், “பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போது, வேலை நிறுத்தம் அறிவிப்பது சரியில்லை. இதுவரை 3 சுற்று பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து முடிந்துள்ளது. அரசு அவர்களுடைய எல்லா கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நட்டத்தில் போய்க்கொண்டிருக்கும் போக்குவரத்துக் கழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க சிறிய காலம் எடுக்கும். இந்த வேலை நிறுத்த முயற்சி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே அரசுக்கு கொடுக்கிற அழுத்தம்” என்று தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு குறித்து ஐ.இ தமிழில் இருந்து திமுகவின் தொ.மு.ச மாநில பொருளாளர் கி.நடராஜனிடம் பேசினோம்.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஏன் நடைபெறுகிறது. தொழிலாளர்களின் கோரிக்கை என்ன என்று கி.நடராஜனிடம் கேட்டோம்.

அதற்கு கி.நடராஜன் பதிலளிக்கையில், “தமிழக அரசு அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகத்தின் வருமானத்துக்கும் செலவுக்கும் இடையே இருக்கிற இடைவெளியை சரி செய்ய தமிழக அரசு நிதியளிக்க வேண்டும். ஏற்படுகிற இழப்பை சரி செய்ய அரசு நிதி அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்து 1.09.2019 தேதியில் இருந்து நிலுவையில் உள்ளது. இப்போது 18 மாதம் கடந்துவிட்டது. அதற்குப் பிறகு எங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் முன் வைத்துவிட்டோம். பேச்சுவார்த்தைக்கு கமிட்டி போட்டாகி விட்டது. ஆனால், இது சம்பந்தமாக இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்கள். அமைச்சரிடமும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். போக்குவரத்து துறை செயலாளரிடமும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அடுத்து பேச்சுவார்த்தை தேதி என்ன என்றும் சொல்லவில்லை. இப்போது இருக்கிற என்ன பிரச்னை என்னவென்றால், ஏற்கெனவே 18 மாதம் முடிந்துவிட்டது. இப்போது, தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள் என்றால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துவிட்டது பேச முடியாது என்று கூறிவிடுவார்கள். அடுத்த அரசு வந்தால் மேலும் ஒரு 5 மாதம் ஓடிவிடும். ஆகையினால்தான், நாங்கள் இந்த பிரச்னைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளோம்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில், திமுக, சிபிஐ, சிபிஎம் தொழிற்சங்கங்கள் மட்டும்தான் ஈடுபட உள்ளனர் என்று கூறப்படுகிறதே?

அப்படி இல்லை. எங்களுடன் 9 சங்கங்கள் இருக்கிறது. இந்த 9 சங்கங்கள், இதுவரை 3 முறை இந்த அரசு இயந்திரம் எங்களை வஞ்சிக்கும்போது நாங்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளோம். அப்போது 95 சதவீதம் தொழிலாளர்கள் எங்களுடன் நின்றார்கள். இது வெறும் அரசியல் ரீதியானது இல்லை. இதில் உண்மையான கோரிக்கைகள் இருக்கிறது.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Strike
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment