கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும்படி அம்மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு அரசின் தீவிர நடவடிக்கையினால் தற்போது கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்குக்கு சென்றுள்ளார். அப்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய விராலிமலை எம்.எல்.ஏ சி விஜயபாஸ்கர் அமைச்சரின் கூட்மத்தில் கலந்து கொண்டு பிற சுகாதார பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகளுக்கு பிந்தைய கொரோனா சிகிச்சை மையங்களை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், விஜயபாஸ்கர் கூறியது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார், மேலும் இதே திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் புதுக்கோட்டையின் ஆறு எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்ட நிலையில், அமைச்சர் மா சுப்பிரமணியன் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஜயபாஸ்கர், கொரோனா தொற்று பாதிப்பு காரணமான மாநிலத்தில் இறப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், ஆரம்பகால நோயறிதலை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவுக்கு பிந்தைய மறுவாழ்வு மையங்களை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியின் கூறுகையில், மக்களின் நலனுக்காக பணியாற்றுவதற்கு சாதகமான சூழ்நிலை அவசியம். அதிமுக ஆட்சியின் போது, டி.எம்.கே எம்.எல்.ஏக்கள் நெறிமுறை அனுமதித்த போதிலும் அரசாங்க நிகழ்வுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் உள்ளூர் அமைச்சர்கள் எஸ். ரகுபதி (சட்டம்) மற்றும் சிவா வி மெய்யநாதன் (சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு) ஆகியோர் விஜயபாஸ்கருடன் இணைந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆனால் கடந்த காலங்களில் விஜயபாஸ்கர் விருந்தினராக பங்கேற்ற அரசாங்க நிகழ்வுகளில் பங்கேற்க முயன்றதற்காக இருவரும் கைது செய்யப்பட்ட பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தற்போது அதற்கான "பழிவாங்கும் அரசியலில் திமுக ஈடுபடவில்லை என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி. எதிர்காலத்தில் இதுபோன்ற நேர்மறையான செயல்கள் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக செயல்பாட்டாளர் ஒருவர் கூறினார்.
தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில், மா சுப்பிரமணியன், செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக தலைவர்கள் பி தங்கமணி, எஸ் பி வேலுமணி, சி விஜயபாஸ்கர் மற்றும் பாஜக தலைவர் வனதி சீனிவாசன் ஆகியோர் தங்கள் வருகையின் போது அமைச்சர்களுடன் இணைந்ததை நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து பேசிய அவர் குறைந்தது 28 மாவட்டங்களை பார்வையிட்டோம். கட்டுப்பாட்டு மண்டலமாக இருந்த கிராமங்களையும் தெருக்களையும் பார்வையிட்டோம். இந்த வருகைகள் மற்றும் ஆய்வுகளின் போது பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டனர், ”என்று அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.