கோவையில், மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி செழியன், ”தாய் மொழியாம் தமிழுக்காக, மொழி போராட்டத்தின் உயிர் நீத்த தியாகிகளுக்கு, வீரர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக் கூட்டம் தமிழக முழுவதும் நூற்றுக் கணக்கான இடங்களில் நடந்து கொண்டு இருக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/87b76ed5-d94.jpg)
இந்த நிலையில் இன்றைக்கு கோவை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர், பகுதி செயலாளர், கழக முன்னோடிகளுடைய முன்னிலையில் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் செலுத்தி இருக்கிறோம். இன்று மாலை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லை ஜான் உள்ளிட்டவர்கள் வீரவணக்க பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/eb69ec6e-a66.jpg)
வெவ்வேறு அரசியல் கட்சிகள் இன்றைக்கு தமிழ் மொழி காக்கும் காரியத்தை நாங்கள் செய்கிறோம் என்று, பொய்யான வேடத்தை இட்டாலும் கூட, மொழி காக்கின்ற போரில் அன்று முதல் இன்று முறை தொடர்ந்து களம் காணக் கூடிய ஒரே தலைவர், ஸ்டாலின் மட்டுமே. மொழி பிரச்சனை, இனப்பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்கக் கூடிய ஒரே ஆளாக ஸ்டாலின் இருக்கிறார். தி.மு.க.,வின் தலைமை கழக உத்தரவின்படி இன்று ஒவ்வொரு தொண்டனும் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். வீரர்கள் தியாகிகள் புகழ் ஓங்குக என தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை