/tamil-ie/media/media_files/uploads/2020/06/a172-1.jpg)
K P Anbazhagan positive corona virus, K P Anbazhagan corona virus, K P Anbazhagan positive corona, chennai news, tamil news, latest tamil news, கேபி அன்பழகன் கொரோனா, அமைச்சர் கேபி அன்பழகனுக்குகொரோனா
Minister KP Anbazhagan Tests Positive for COVID-19: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனை இதனை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்தொற்று தொடர்பாக சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பொது மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் அன்பழகனும் பங்கேற்றார். இதன்பிறகு மியாட் மருத்துவமனையில் அவருக்கு நோய் தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அன்பழகனுக்கு நோய்த்தொற்று இருப்பதாக சில தகவல்கள் பரவின.
ஆனால், இதனை அன்பழகன் மறுத்தார். பரிசோதனை செய்தது உண்மை என்றும் தனக்கு நோய்த்தொற்று இல்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சென்னை மியாட் மருத்துவமனை நிர்வாகம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்த ஒரு அறிகுறியும் காட்டவில்லை. சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது அதுவும் நார்மலாக இருந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தோம்.
அன்பழகனுக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது கொரோனா பரிசோதனை முடிவில், அவருக்கு, கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் காணப்படுகிறது. அதற்கான சிகிச்சை கொடுத்து வருகிறோம். அன்பழகன் உடல்நிலை சீராக இருந்து வருகிறது. வைரல் தொடர்பான அனைத்து விஷயங்களும் இயல்பாக உள்ளன. இவ்வாறு மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.