திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் அமைக்க விரைவில் டெண்டர் கோரப்படும் – சேகர் பாபு

திருப்பரங்குன்றத்தை பொறுத்த அளவில் முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பான குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தகுந்த இடம் தேர்வானதும் பார்க்கிங்கு என தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும் – மதுரையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருப்பரங்குன்றத்தை பொறுத்த அளவில் முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பான குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தகுந்த இடம் தேர்வானதும் பார்க்கிங்கு என தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும் – மதுரையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

author-image
WebDesk
New Update
sekarbabu thirupparankundram

திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் அமைப்பதற்கு சாத்திய கூறுகள் இருப்பதாக அதை ஆராய்ந்த நிபுணர்கள் அறிவித்திருக்கிறார்கள். கூடிய விரைவில் எல்காட்டில் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் கோரப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: 

ரோப் கார் குறித்த கேள்விக்கு, ”சாத்திய கூறு இருப்பதாக அதை ஆராய்ந்த நிபுணர்கள் அறிவித்திருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் எல்காட்டில் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் கோரப்படும்,” என்று அமைச்சர் கூறினார்.

பார்க்கிங் வசதி குறித்த கேள்விக்கு, ”தேவையான அளவிற்கு அனைத்து வசதிகளும் படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது.  திருப்பரங்குன்றத்தை பொறுத்த அளவில் முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பான குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத இந்த கோவில் லட்சுமிபுரம் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்குடன் சேர்த்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பார்க்கிங் வசதிக்கு இடையூறு இல்லாத இடங்களை தேர்வு செய்து வருகிறோம். மேலும், காவல்துறை உதவியுடன் போக்குவரத்து சீர் செய்து வருகிறோம். இடம் தேர்வானதும் பார்க்கிங்கு என தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்,” என கூறினார்.

Advertisment
Advertisements
Minister PK Sekar Babu Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: