3 பெண்கள் உயிரிழப்பு சம்பவம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ்

மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சமந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

விபத்தால் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக விசாரனையைத் தொடங்கியது. மேலும், மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சமந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது .

மாற்றுத்திறனாளி எஸ். சரண்யா: காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சரண்யா பணியாற்றிவந்தார்.

அலுவகத்தில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்தி வந்திருக்கிறார்.

மாற்றுத் திறனாளியான சரண்யா, இரண்டு தினங்களுக்கு முன்பு இயற்கை உபாதை காரணமாக அருகில் வசிக்கும் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த 8 அடி செப்டிக் டேங்க், வெறும் ஓடால் மூடப்பட்டிருப்பதை அறியாமல், சரண்யா பரிதாபமாக தவறி விழுந்தார்.

பலதரப்பட்ட கனவுகளோடும், உணர்வுகளோடும்  தன்னை இணைத்துக் கொண்டு, சமூகத்தில் போராடி வாழ்ந்து  வந்த ஒரு பெண்ணின் உயிர் பரிதாமாக பிரிந்தது.

அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த மரணம் என்றும், சரண்யாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்  மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

தாய் கரோலினா – மகள் இவாலின்  மரணம்: 

சென்னையில் பெய்த கனமழையின் போது இரும்புலியூர் – மதுரவாயல் பைபாஸ் சாலையில்  வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, மழைநீர் கால்வாயில் தவறி விழுந்த தாய் கரோலினா – மகள் இவாலின் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இளைய மகள் இவாஞ்சலின் தனது தாயையும், மூத்த அக்காவையும் இழந்து பரிதவிக்கிறார்.

மழைநீர் கால்வாய்கள் மரணக் குழியாக மாறியதற்கு மத்திய – மாநில அரசுகளின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், ” சென்னை – நொளம்பூர் அருகே கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த தாயார் – மகள் குடும்பத்தினருக்கு நேற்று இரங்கல் தெரிவித்து, நிவாரணம் வழங்கப்படுமென தெரிவித்திருந்த நிலையில், இன்று அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu human rights body taken suo motu cognisance after 3 women die in accident236240

Next Story
‘மேட்டாங்காடு காஞ்சு போச்சு’: போராடும் உழவர்களுக்கான பாடல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com