கோவை, உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியில் அமைந்து உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவிலில் உள்ள பழமையான சிலைகள் குறித்து ஆய்வு நடத்தினர். கோவை மாவட்டத்தில் பழமையான கோவில்களில் நிறுவப்பட்டு உள்ள சிலைகள் மாற்றி அமைத்து வைக்கப்பட்டு இருக்குமா? சிலைகள் பாகங்கள் சுரண்டபட்டு உள்ளதா? சிலைகள் குறித்தும் சோதனை நடத்தினர்.
மேலும் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். கோவில் நிர்வாகத்தில் உள்ள ஆவணங்களையும் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர்.
நேற்றைய தினம் கோனியம்மன் திருக்கோவிலிலும் அங்கு அமைந்து உள்ள சிலைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். ஆய்வில் மேற்கொண்டு உள்ள தகவல்களை சென்னையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு சென்றனர்.