scorecardresearch

சென்னை, கோவை, திருச்சி… 11 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்!

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 101.4 என்ற டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

express news

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 ஊர்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் மக்களை வாட்டி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 11 இடங்களில் வெயில் சுட்டெரிக்கிறது.

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 101.4 என்ற டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்த ஆண்டு, சென்னையில் முதன்முறையாக வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கோயம்பத்தூரில் 101.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், தர்மபுரியில் 102.20 டிகிரி பாரன்ஹீட், கரூரில் பரமத்தி பகுதியில் 104.90 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, மதுரை விமான நிலையப் பகுதியில் 102.56 டிகிரி பாரன்ஹீட், சேலத்தில் 103.64 டிகிரி பாரன்ஹீட் மற்றும் திருச்சியில் 102.74 டிகிரி பாரன்ஹீட்டும், திருப்பத்தூரில் 103.28 டிகிரி பாரன்ஹீட், திருத்தணியில் 102.20 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 104.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெயிலாக ஈரோட்டில் 105.44 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கோடைக்கால வெயிலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் சுட்டெரித்து நிலையில், நேற்று 104.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனால் பகல் பொழுதில் மக்கள் வீடுகளுக்குள்ளயே இருக்கும் சூழல் அமைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu increase in temperature crossed 100 degree fahrenheit

Best of Express