தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் தொழில் சங்கங்கள் இணைந்து தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முறையிட்டு வருகிறது. இருப்பினும் செவி சாய்க்காத தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் சார்பில் தங்களின் கோரிக்கைகளை பதிவுத் தபால்கள் மூலம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் தொழில் சங்கங்கள் இணைந்து முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியது. இந்தப்போராட்டத்தின் வாயிலாக அனுப்பப்படும் கோரிக்கை மனுவில், தங்களின் கோரிக்கைகளான சிறு தொழிற்சாலைகள் மின் நுகர்வோர்களுக்கு நிலை கட்டணம் ஒரே பிரிவில் பழைய கட்டணமான ரூபாய் 35-க்கு மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். சிறு தொழிற்சாலைகள் மின் நுகர்வோர்களுக்கு பீக் ஹவர்ஸ் சார்ஜை உடனடியாக திரும்பப் பெறக் வேண்டும். மின்சார வாரியத்தின் வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள நடைமுறைகளை (LT 3A-1 Traffic) அமல்படுத்த வேண்டும். மேற்கூரை கிள்ஸ் சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு மல்டி இயர் டிராபியை உடனடியாக ரத்து செய்வதுடன் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மின்சார மற்றும் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முதலமைச்சர் சிறு தொழில்களின் நிலையை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு பதிவு தபால் அனுப்பப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/2a07a368-c65.jpg)
திருச்சியில் டிடிசியா சிறு குறு தொழில் சங்கங்களின் தலைவர் முகில் ராஜப்பா தலைமையில் சிறு குறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் கோரிக்கைகளை பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் அந்த அமைப்பின் சார்பில் சுமார் 150 நபர்கள் கலந்துக்கொண்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் பதிவுத் தபால்களை அனுப்ப திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு வந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் அவர்களது இந்த கோரிக்கைகளை கடிதங்களாக தலைமை செயலகத்திற்கு அனுப்பினர்.
தகவல்கள்: க.சண்முகவடிவேல் - திருச்சி, ரஹ்மான் - கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“