/indian-express-tamil/media/media_files/FUDbWqdU3BSl03ovfX4S.jpg)
முதலீடுகளை ஈர்ப்பதை விட வேலை வாய்ப்பில் ஸ்டாலின் கவனம் செலுத்தினார் என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார். (Picture Thanks to Sun News)
சென்னையில் இரண்டு நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, "முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை விட வேலைவாய்ப்புகள் குறித்து அதிகம் கேட்டு வந்தார்.
பெண்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அவர் மிக கவனத்துடன் செயல்பட்டார்.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாட்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என முதலமைச்சர் எண்ணுகிறார்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை அளிக்க வேண்டும். வரும் வாரத்திலும் கூடுதலாக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்த முதலீட்டுகள் இரண்டு நாட்கள் மாநாடுடன் முடிவதில்லை. தற்போது வரை 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன" என்றார்.
மேலும், “இந்த மாநாட்டின் மூலம் எத்தனை லட்சம் தமிழ்நாட்டிற்கு வரும் என்று முதலமைச்சர் கேட்கவில்லை; மாறாக எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என கேட்டார்" எனக் கூறினார்.
இந்த மாநாட்டில் மொத்தம் ₹6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதில், தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றில் ₹3,79,809 கோடி முதலீடுகளும், ஆற்றல் துறைகளில் ₹1,35,157 கோடி முதலீடுகளும், சிறு குறு தொழில் நிறுவனங்களில் ₹63,573 கோடி முதலீடுகளும் கிடைத்துள்ளன.
மேலும், “வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் ₹62,939 கோடி முதலீடுகள் வந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் (ஐடி) டிஜிட்டல் சேவைகள் துறைகளில் ₹22,130 கோடி முதலீடுகள் வந்துள்ளன.
இதன்மூலம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மறைமுகமாக 12 லட்சதது 35 ஆயிரத்து 945 பேர் வேலை வாய்ப்பை பெற உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.