அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிபோக இந்த பேட்டி தான் காரணமா?

IT Minister M Manikandan sacked : உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று பேசியதால் சர்ச்சை

By: Updated: August 8, 2019, 09:18:53 AM

Tamil Nadu Information technology minister M Manikandan sacked : தமிழக அமைச்சரவையில் முக்கிய பங்கினை வகிக்கும் அமைச்சர் மணிகண்டனை அப்பொறுப்பில் இருந்து விடுத்துள்ளது தமிழக அரசு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பரிந்துரையின் பெயரில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது ஆளுநர் மாளிகை.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் அமைச்சர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருவாய்துறை அமைச்சராக பதவி வகித்துவரும் ஆர்.பி. உதயக்குமார், தொழில்நுட்பத்துறையின் அமைச்சராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி முதல் அதிரடி

ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிக்கை

 

Tamil Nadu Information technology minister M Manikandan sacked

உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முதல்வரை விமர்சனம் செய்த அமைச்சர்

மணிகண்டனின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் வரும் அரசு கேபிள் டிவி துறையின் தலைவராக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி எமனேஸ்வரத்தில் தமிழக அரசின் சார்பில் தேசிய கைத்தறி தினவிழா நடைபெற்றது.

கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ. 15.82 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார் மணிகண்டன். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஏற்கனவே உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் இந்த தொழிலில் இயங்கி வந்த காரணத்தால் முன் அனுபவம் அதிகம் என்பதால் இந்த துறையை திறமையுடன் நடத்துவார் என்று கூறினார்.  தனியார் நிறுவனங்கள் எல்லாம் அரசு கேபிள் டிவிக்கு மாற வேண்டும் என்று அவர் மற்ற கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு கூறுகிறார். ஒரு நாள் இரவில் சாத்தியமில்லாத காரியம் இது.

ஆனால்  ராதாகிருஷ்ணன், அக்‌ஷயா என்ற பெயரில் தனியார் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வருவதாகவும், வில்லெட் என்ற செட்-ஆப்-பாக்ஸ் உதவியின் வழியாக 2 லட்சம் கேபிள் இணைப்புகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். தன்னுடைய நிறுவனத்தின் கீழ் இருக்கும் 2 லட்சம் இணைப்புகளை அரசு கேபிள் இணைப்புகளாக மாற்றிவிட்டால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உடுமலை ராதாகிருஷ்ணன் நடந்து கொள்ள வேண்டும். பின்பு மற்றவர்களை அரசு கேபிள் டிவிக்கு மாற்றக் கூறலாம் என்று வெளிப்படையாக நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் பேசினார்.

முதல்வர் இதுநாள் வரையில், அரசு கேபிள் துறையின் தலைவராக உடுமலை ராதாகிருஷணன் நியமிக்கப்பட்டது குறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் வெளிப்படையாக கூறினார். இதன் பின்பு தான் இவரின் பணிநீக்கம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பணிநீக்கம் குறித்து மணிகண்டனிடம் கேள்விகள் கேட்ட போது, இது வரை எந்த காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை என கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu information technology minister m manikandan sacked inappropriate comments on udumalai radhakrishnan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X