த.இ.தாகூர் குமரி மாவட்டம்
குமரியில் மாயமான நரிக்குறவர் சிறுமி 5 மணி நேரத்தில் கேரளாவில் வைத்து மீட் காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நேற்று (மே 12)ம் தேதி மாலை கன்னியாகுமரி காவல் நிலையத்தில் நரிக்குறவர் சமூக சிறுமி சங்கீதா என்பவரை, காணவில்லை என அச்சிறுமியின் தாய் சரஸ்வதி, புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கண்டுபிடிக்க, உடனடியாக மூன்று தனிப்படை அமைத்தனர்.
கன்னியாகுமரி காவல் நிலையம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் குமரி, நெல்லை, காவல்துறையின் சோதனை சாவடிகள்,அண்டை மாவட்டங்களான, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரியை அடுத்த அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள காவல் நிலையங்களுக்கு சிசிடிவி கேமரா பதிவுகள் என பவற்றை தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.
சிறுமி காணவில்லை என புகார் கொடுத்த 5 மணி நேரத்தில் நெய்யாற்றன்கரை பேருந்து நிலையத்தில் சிறுமி சங்கீதாவை பார்த்த அங்கு பணியில் இருந்த கேரள மாநிலத்தின் காவலர்கள்,நெய்யாற்றன்கரை காவல் நிலையத்திற்கு சிறுமி சங்கீதாவை அழைத்து வந்து சேர்த்துள்ளனர். அது குறித்த தகவலை கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு படை காவலர்கள், சிறுமியின் தாய் சரஸ்வதியை உடன் அழைத்துக்கொண்டு,கேரள மாநிலத்தின் நெய்யாற்றன்கரை காவல் நிலையத்திற்கு சென்றனர். சிறுமி காணாமல் போன செய்தி சமூக ஊடகங்களில் பரவியதை பார்த்த கேரள மாநிலம் நெய்யாற்றன்கரை காவல் நிலையம் பகுதியில் உள்ள இளைஞர்கள் பலரும், அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று சிறுமியை கண்டுள்ளனர்.
அதன்பிறகு சிறுமிக்கு மாற்றுவதற்கு புத்தாடை வாங்கி கொடுத்துள்ளனர். இதனிடையே கன்னியாகுமரி போலீசாருடன் அங்கு சென்ற சிறுமியின் தாய் தனது மகளை பெற்றுக்கொண்டார். பழைய ஆடையுடன் காணாமல் போன சிறுமி பளபளக்கும் புத்தாடையுடன் தாய் சரஸ்வதி, சிறப்பு படை காவலர்களுடன் மீண்டும் கன்னியாகுமரி வந்தாள். சிறுமி காணவில்லை என புகார் கொடுத்த அடுத்த 5 மணி நேரத்தில் சிறுமி சங்கீதாவை மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“