/tamil-ie/media/media_files/uploads/2019/06/z832.jpg)
Tamilnadu latest news
Tamil Nadu Latest News live: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக நேற்று தனது இலாக்காக்களில் இடம் பெறும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது.
ஆனால் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக-வினர் யாருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை.
Tamilnadu Latest News:
பாஜக கூட்டணியிலிருந்த அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அங்கு வெற்றி பெற்ற ஓபிஎஸ்-ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் 30-ம் தேதி பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெறாதது, அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Live Blog
Tamilnadu Latest News Live Updates
தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!
யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்கவே விரும்புகிறோம். மக்கள் கருத்துகளை கேட்ட பின்பே கல்விக்குழுவின் வரைவு அமல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
சென்னை விமான நிலையத்தில தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது,
ஜெயலலிதா பலமுறை சட்டமன்றத்தில் உறுதியாக சொல்லி இருக்கிறார். அதிமுக அரசை பொறுத்தவரையில் இருமொழி கொள்கை தான். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் உள்ள கொள்கை தான் அதிமுக அரசின் உறுதியான கொள்கை முடிவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
அன்புக்குரிய சகோதர சகோதரிகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் pic.twitter.com/KTtk1VEmZN
— OPRaveendranath (@OPRavindranath) 1 June 2019
அரசு ஊழியர்கள், பணியாளர்கள் வேட்டி போன்ற தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து அலுவலகம் வரலாம்; டி-சர்ட் போன்ற சாதாரண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். பெண் ஊழியர்கள் புடவை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து வரலாம் - அரசாணை
பழனி முருகன் கோவில் பக்தர்கள் செல்லும் வின்ச் என அழைக்கப்படும் முதலாவது மின் இழுவை ரயில் மட்டும் பராமரிப்பு பணியின் காரணமாக வரும் திங்கள்கிழமை , அதாவது 3 ம் தேதி முதல் சுமார் 45 நாட்களுக்கு சேவை நிறுத்தம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights